எல்லைகளை மூடி பிற மாநிலங்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தமிழகம்!

சனி, 21 மார்ச் 2020 (08:45 IST)
எல்லைகளை மூடி பிற மாநிலங்களுக்கு அதிர்ச்சி கொடுத்த தமிழகம்!
உலகையே ஆட்டுவித்து வரும் கொரோனா கடந்த சில நாட்களாக இந்தியாவிற்குள் நுழைந்து பல்வேறு மாநிலங்களில் பரவி வருகிறது. தமிழகத்தில் தற்போதைய நிலையில் கொரோனா தாக்கம் குறைவாக இருந்தாலும் கவனக்குறைவாக இருந்தால் அதிகமாக தாக்கும் அபாயம் இருக்கிறது. இதனால் நேற்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இரண்டு அதிரடி முடிவுகளை எடுத்து உள்ளார் 
 
நேற்று முன்தினம் பிரதமர் கூறியதற்கு ஏற்ப வரும் 22ஆம் தேதி சுய ஊரடங்கு உத்தரவை அமல்படுத்த வேண்டும் என்று முதல்வர் முடிவு செய்தார். இதனை அடுத்து பேருந்து உள்பட அனைத்தும் இயங்காது என்ற என்ற முடிவை முதல்வர் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இரண்டாவதாக எவ்வாறு வெளிநாட்டில் இருந்து இந்தியாவிற்கு வருபவர்களால் இந்தியாவில் கொரோனா நோய் பரவியதோ, அதேபோல் வெளிமாநிலத்தில் இருந்து தமிழகத்திற்குள் வருபவர்களால் தான் தமிழகத்தில் கொரோனா பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இதனை அடுத்து தமிழக எல்லைகளை உடனடியாக மூட முதல்வர் உத்தரவிட்டார். கேரளா கர்நாடகா மற்றும் ஆந்திரா ஆகிய 3 மாநிலங்களிலும் கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால் உடனடியாக தமிழகத்தின் எல்லையை மூடினால் கொரோனாவை கட்டுப்படுத்தலாம் என்று முடிவு செய்துள்ளார். தமிழகத்தில் கொரோனா தாக்கப்பட்ட மூவருமே வெளிநாடு அல்லது வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் என்பதால் தான் இந்த அதிரடி நடவடிக்கையை அவர் எடுத்துள்ளதாகவும், இதனால் தமிழகம் முற்றிலும் கொரோனாவில் இருந்து காப்பாற்றப்படும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது
 
இதேபோன்ற முடிவை அனைத்து மாநில அரசுகளும் எடுக்க வேண்டும் என்பதுதான் தற்போதைய நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தின் எல்லையை தைரியமாக மூடிய தமிழக முதல்வருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்