பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம்; பல்வீர் சிங் ஐபிஎஸ் சஸ்பெண்ட் ரத்து! என்ன காரணம்?

Siva

செவ்வாய், 23 ஜனவரி 2024 (08:28 IST)
ஏஎஸ்பி யாக பணியாற்றி வந்த பல்வீர் சிங் என்பவர் விசாரணைக்கு வந்தவர்களை பற்களை பிடுங்கிதாக குற்றம் சாட்டிய நிலையில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த நிலையில் அந்த சஸ்பெண்ட் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.

நெல்லை மாவட்டத்தில் உள்ள அம்பாசமுத்திரம் என்ற பகுதியில் பல்வீர் சிங் ஐபிஎஸ் என்பவர் ஏஎஸ்பி யாக பணிபுரிந்து வந்தார். இவர் விசாரணைக்கு வந்தவர்களை கடுமையாக தாக்கி பற்களை பிடுங்கியதாக குற்றம் சாட்டப்பட்ட நிலையில் மனித உரிமை ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது.

அதன் பின் பல்வீர் சிங் ஐபிஎஸ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மேலும் இதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில்  திடீரென பல்வீர் சிங்கின் சஸ்பெண்ட் ஆனால்  ரத்து செய்யப்பட்டதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த தகவல் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.  

ALSO READ: பற்கள் பிடுங்கப்பட்ட விவகாரம்; பல்வீர் சிங் ஐபிஎஸ் சஸ்பெண்ட் ரத்து! என்ன காரணம்?

இந்த நிகழ்வு குறித்து பல்வீர் சிங் விளக்கம் அளித்ததாகவும் அந்த விளக்கத்தின் அடிப்படையில் தான் அவருடைய சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்டதாகவும் தமிழக அரசு சஸ்பெண்ட் செய்யப்பட்டதற்கான காரணத்தை தெரிவித்துள்ளது.  பல்வீர்  சிங்கிற்கு  பதவி உயர்வு வழங்கலாம் என்றும் கூறப்படுவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்