ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் என்னென்ன? தமிழக அரசு அறிவிப்பு!

வியாழன், 14 அக்டோபர் 2021 (16:28 IST)
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த பல மாதங்களாக தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் கடந்த சில மாதங்களாக ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை தமிழக அரசு அளித்து வருகிறது என்பதும் தெரிந்ததே. 
 
இந்த நிலையில் இன்று கூடுதல் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி அனைத்து மத வழிபாட்டு தலங்களும் வெள்ளி சனி ஞாயிறு ஆகிய கிழமைகளில் அனுமதிக்கப்படும் என்றும் திருமண விழாக்களில் 100 பேர்கள் வரை பங்கேற்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் திருவிழாக்கள் அரசியல் சார்ந்த நிகழ்வுகளை விதிக்கப்பட்ட தடை தொடரும் என்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்குச் செல்ல பொதுமக்களுக்கு அனுமதி என்றும் அனைத்து வகைகள் மற்றும் உணவகங்களில் இரவு 11 மணி வரை செயல்படும் செயல்பட அனுமதி என்றும் அறிவித்துள்ளது
 
இதற்கு முன்னர் அனைத்து கடைகளும் இரவு 10 மணி வரை மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மழலையர் அங்கன்வாடியில் பணியாற்றுவோர் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படும் மாதாந்திர மக்கள் தொடர்பு முகாம்கள் நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது
 
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்