கோவில்கள் திறக்கப்படுமா? ஆலோசனையில் முதல்வர்!

புதன், 13 அக்டோபர் 2021 (10:15 IST)
கொரோனா கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வு அளிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை. 
 
தமிழகத்தில் கொரோனா மெல்ல மெல்ல குறைந்து வரும் நிலையில் தளர்வுகளுடன் கூடிய கட்டுபாடுகள் அமலில் இருந்து வருகிறது. கடந்த முறை பள்ளிகளை திறக்கலாம் என் அறிவிக்கப்பட்டது. இம்முறை கோவில்கள் திறக்கப்பட வாய்ப்புகள் உள்ளது என கூறப்படுகிறது. 
 
இதனிடையே கொரோனா கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வு அளிப்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். ஆலோசனையில் தலைமைச்செயலர், மருத்துவத்துறை செயலர், துறை ரீதியான அதிகாரிகள் பங்கேற்கவுள்ளனர். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்