மீட்பு கருவி உருவாக்கினால் 5 லட்சம் பரிசு! – தொழில்நுட்பத்துறை செயலர்

செவ்வாய், 29 அக்டோபர் 2019 (16:29 IST)
ஆழ்துளை கிணறுகளில் இருந்து குழந்தைகளை மீட்பதற்கு நவீன கருவிகளை உருவாக்குபவர்களுக்கு 5 லட்சம் பரிசளிப்பதற்கான பரிந்துரையை தமிழக அரசுக்கு அனுப்பியுள்ளார் தொழில்நுட்பத்துறை செயலர்.

திருச்சி அருகே நடுக்காட்டுப்பட்டியில் குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்து பலியான சம்பவம் தமிழக அளவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் எவ்வளவு அதிநவீன எந்திரங்கள் உபயோகித்தும் குழந்தையை மீட்க முடியாதது தொழில்நுட்ப வளர்ச்சியில் பல சாதனைகள் புரிந்திருந்தாலும், குழந்தைகளை மீட்க சரியான உபகரணம் கண்டுபிடிக்கப்படாததை நமக்கு உணர்த்தியிருக்கிறது.

இதனால் ஆழ்துளை கிணறுகளில் விழும் குழந்தைகளை உடனடியாக மீட்க நவீன சாதனங்கள் தற்போதைய சூழலில் அவசியமாகிறது. இந்த கருத்தை முன்னிறுத்தி ஐஏஎஸ் அதிகாரியும், தொழில்நுட்பத்துறை முதன்மை செயலருமான சந்தோஷ்பாபு தமிழக அரசுக்கு ‘ஹேக்கத்தான்’ போட்டி ஒன்றை நடத்த பரிந்துறை செய்துள்ளார்.

இந்த போட்டியில் ஆழ்துளை கிணற்றில் விழும் குழந்தைகளை மீட்கும் நவீன் கருவிகளை அறிமுகப்படுத்தலாம். அதில் சாத்தியமானதும், திறம்பட செயல்படுவதுமான உபகரணத்திற்கு 5 லட்சம் பரிசாக வழங்கப்படும் என கூறப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்