நாகை சப்பர விபத்தில் ஒருவர் பலி - ரூ.5 லட்சம் நிவாரணம்!

சனி, 30 ஏப்ரல் 2022 (10:03 IST)
கோயில் சப்பர திருவிழாவில் இறந்த நபரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு. 

 
நாகை மாவட்டத்தில் திருச்செங்காட்டங்குடி உத்தராபதீஸ்வரர் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்று வருகிறது. உத்திராபதிஸ்வரர் ஆலய ஆண்டு திருவிழாவில் தேரோட்டம் நள்ளிரவு நடந்துள்ளது. தேர் திரும்புகையில் சக்கரத்தில் சிக்கி 60 அடி உயர சப்பரத்தின் சக்கரம் வயிற்றில் ஏறி இறங்கியதில் இளைஞர் ஒருவர் இறந்துள்ளார். இச்சம்பவம் அங்கு பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்நிலையில் நாகை அருகே கோயில் சப்பர திருவிழாவில் இறந்த நபரின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திருச்செங்காட்டாங்குடியில் சப்பரம் ஏறியதால் உயிரிழந்த தீபன்ராஜ் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
 
சமீபத்தில் தஞ்சை அருகே களமேடு என்ற பகுதியில் சித்திரை தேரோட்ட விழா நடைபெற்றபோது திடீரென மின்சாரம் ஷாக் அடித்து 11 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் உயிரிழந்த 11 பேரின் குடும்பத்திற்கும் தஞ்சை மாநகராட்சியில் வேலை வழங்கப்படும் என தஞ்சை மேயர் உறுதி அளித்துள்ளார். ஏற்கனவே அதிமுக திமுக மற்றும் தமிழக அரசு உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி செய்துள்ளது என்பது தெரிந்ததே. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்