புதிய கல்வி கொள்கை குறித்து முதல்வர் இன்று ஆலோசனை: தமிழக அரசு எதிர்க்குமா?

திங்கள், 3 ஆகஸ்ட் 2020 (07:49 IST)
சமீபத்தில் மத்திய அரசு நாடு முழுவதும் புதிய கல்வி கொள்கை குறித்த ஒரு அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்புக்கு ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்கள் மாறி மாறி பதிவாகி வருகின்றன
 
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமலஹாசன் உள்பட பலர் இந்த புதிய கல்விக் கொள்கையை ஆதரித்தனர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த குஷ்புவும் ஆதரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
ஆனால் அதே நேரத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலின் உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் புதிய கல்விக் கொள்கையை கடுமையாக எதிர்த்து வருகின்றனர். தமிழக அரசு புதிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என ஸ்டாலின் உள்பட ஒருசில தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர் 
 
இந்த நிலையில் புதிய கல்விக் கொள்கை குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் இன்று ஆலோசனை செய்ய உள்ளார். இந்த ஆலோசனையில் உயர்கல்வித்துறை அமைச்சர் கேபி அன்பழகன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர் 
 
மேலும் இன்றைய ஆலோசனையில் தமிழகத்தில் பள்ளி திறப்பது குறித்தும், பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் அளிக்கப்படுவது குறித்தும் ஆலோசனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இன்று காலை தலைமைச் செயலகத்தில் இந்த ஆலோசனை நடைபெற இருப்பதாகவும் இந்த ஆலோசனையின் முடிவில் சில முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்