3 நாட்கள் நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தொடர் - தனபால் அறிவிப்பு!

செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (15:21 IST)
சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 25 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறும் என சபாநாயகர் தனபால் அறிவிப்பு. 

 
தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்னதாக 2021 - 2022 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட் இன்று தமிழக சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. ஊரக வளர்ச்சி, கிராமப்புற வீட்டு வசதி, மருத்துவம், கல்வி என பல துறைகளுக்குமாக நிதி ஒதுக்கீடு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.
 
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 25 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறும் என சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார். அதாவது, 25 ஆம் தேதி 2021- 2022 ஆம் ஆண்டிற்கான இடைக்கால பட்ஜெட் மீது பொது விவாதமும், 26 ஆம் தேதி இடைக்கால பட்ஜெட் மீது 2 ஆம் நாள் பொது விவாதமும், தொடர்ந்து, 27 ஆம் தேதி இடைக்கால நிதிநிலை அறிக்கை மீதான பொது விவாதத்திற்கு பதிலுரை அளிக்கப்படும் என்று தெரிவித்தார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்