தமிழகத்திற்கு முன்கூட்டியே தேர்தலா? சென்னை வரும் தேர்தல் ஆணைய அதிகாரிகள்!

வியாழன், 4 பிப்ரவரி 2021 (07:48 IST)
தமிழகம் கேரளா மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இந்த ஐந்து மாநிலங்களில் தமிழகத்திற்கு தான் முதலில் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
தமிழகத்தில் சட்ட மன்றத்தின் பதவிக்காலம் மே மாதத்துடன் முடிவடைய உள்ளதை இதையடுத்து ஏப்ரல் மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது 
 
இந்த நிலையில் தமிழகம் கேரளா மேற்கு வங்கம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களில் தமிழகத்திற்கான தேர்தலை முதல் கட்டமாக நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தமிழகத்தில் தேர்தல் ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்
 
இந்த நிலையில் வரும் பத்தாம் தேதி தலைமை தேர்தல் ஆணையர்கள் சென்னை வரவிருப்பதாகவும் அப்போது அவர்கள் அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை செய்து அதன்பின் தேர்தல் தேதியை முடிவு செய்யவிருப்பதாகவும் தமிழகத்தில் தேர்தல் குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு விரைவில் வரும் என்றும் கூறப்படுகிறது. தமிழகத்தில் ஏப்ரல் முதல் வாரமே தேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளதாக கருதப்படுவதால் அரசியல் கட்சிகளிடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்