தமிழகம், புதுவையில் 4 நாட்களுக்கு மழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!

திங்கள், 8 மார்ச் 2021 (07:37 IST)
வளிமண்டலத்தின் சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்து வரும் நான்கு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது 
கடந்த சில நாட்களாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் வெப்பநிலை அதிகரித்து வருகிறது. கோடை ஆரம்பித்து விட்டதன் அறிகுறியாக இப்பொழுதே அதிக வெப்ப நிலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் வளி மண்டலத்தில் ஏற்பட்டுள்ள சுழற்சி காரணமாக தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரிக்கடல் முதல் வட தமிழகம் வரை வளிமண்டலத்தில் சுழற்சி நிலவி வருவதாகவும் இதன் காரணமாக இன்றும் நாளையும் கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்றும் ஏனைய மாவட்டங்களில் வறண்ட வானிலை நிலவும் என்றும் அறிவித்துள்ளது 
 
அதேபோல் மார்ச் 10 மற்றும் 11 ஆகிய இரண்டு நாட்களிலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்