தேர்தலை முன்னிட்டு அனைத்துக் கட்சி வேட்பாளர்களுக்கும் மக்கள் மேல் அளவுக்கு அதிகமாக அன்பு வர ஆரம்பித்துள்ளது. இதையடுத்து வாக்கு சேகரிக்க செல்லும் வேட்பாளர்கள் பொதுமக்கள் வேலை செய்யும் போது அவர்களுக்கு உதவி எல்லாம் செய்து வருகின்றனர். சமீபத்தில் ஒரு அதிமுக வேட்பாளர் துணி எல்லாம் துவைத்த வீடியோ வைரலானது.