தமிழக சட்டப்பேரவையில் இன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு 2024-2025 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் பட்ஜெட் தாக்கல் செய்தது. இதுகுறித்து, அதிமுக, அமமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், த.மா.கா மற்றும் அகில இந்திய சமத்து மக்கள் கட்சியும் விமர்சித்துள்ளது.
தமிழக அரசின் 2024-2025 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் அகில இந்திய சமத்து மக்கள் கட்சியின் தலைவரும், நடிகருமான சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
''தமிழக அரசின் 2024- 2025 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் வறுமையைப் போக்கவும், வேலை வாய்ப்பை அதிகரிக்ககூடிய பொருளாதார நிலையை உயர்த்தக் கூடிய பட்ஜெட்டாக அமையாமல், தமிழக விவசாயிகளின் தமிழக மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாத பட்ஜெட்டாக அமைந்திருக்கிறது ''என்று விமர்சித்துள்ளார்.