மின்சாரம் துண்டிப்பு!? பாதுகாப்பு குறைபாடு இருந்தது தெரிகிறது! - எடப்பாடி பழனிசாமி கருத்து!

Prasanth K

ஞாயிறு, 28 செப்டம்பர் 2025 (09:02 IST)

கரூரில் நிகழ்ந்த கூட்டநெரிசல் பலி குறித்து பேசிய எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாதுகாப்பு குறைபாடுகள் இருந்ததாக கருத்து தெரிவித்துள்ளார்.

 

கரூரில் நேற்று தவெக தலைவர் விஜய் நடத்திய பிரச்சாரத்தின்போது ஏராளமானோர் கூடியதால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை 39 பேர் பலியாகியுள்ளனர். பலர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். கூட்ட நெரிசலில் இறந்தவர்கள் குடும்பங்களை நேரில் சந்தித்த எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு ஆறுதல் கூறினார்.

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “தமிழக வெற்றிக் கழகம் நடத்திய முந்தைய கூட்டங்களின் நிலையை ஆய்வு செய்து, அதற்கேற்ப முழு பாதுகாப்பையும் அரசு மற்றும் காவல்துறை அளித்திருக்க வேண்டும். மின்சாரம் துண்டித்தபோது ஏற்பட்ட தள்ளுமுள்ளு காரணமாக கூட்ட நெரிசலில் சிக்கி பலர் இறந்ததாக செய்திகள் வருகிறது” எனக் கூறியுள்ளார்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்