மதுரை மாவட்டத்திற்கு 23ஆம் தேதி உள்ளூர் விடுமுறை.. மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவு..!

Mahendran

திங்கள், 15 ஏப்ரல் 2024 (13:41 IST)
ஏப்ரல் 23ஆம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என மாவட்ட ஆட்சித் தலைவர் சங்கீதா சற்றுமுன் உத்தரவு பிறப்பித்துள்ளார். 
 
மதுரையில் சித்திரை திருவிழா தொடங்க இருப்பதை அடுத்து ஏராளமான பக்தர்கள் சித்திரை திருவிழாவை காண வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
இந்த நிலையில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான வைகை ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளும் நிகழ்வு என்பது மிகவும் சிறப்பானது என்பதும் இதை காண்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றில் குவிந்திருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அந்த வகையில் வைகை ஆற்றின் கள்ளழகர் எழுந்தருளும் நாளான ஏப்ரல் 23ஆம் தேதி மதுரை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை என்று மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா உத்தரவு பிறப்பித்துள்ளார். 
 
இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் மே 11ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்