சென்னை கண்ணகி நகரில் கஞ்சா போதையில் போலீசாரை தாக்கியதாக பிரேம், ராகுல், சந்தோஷ் குமார் ஆகிய மூன்று பேரை கைது செய்துள்ள போலீசார் அவர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்.
நேற்று சென்னை கண்ணகி நகரில் 2 இளைஞர்களை தாக்கியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், விசாரணை நடத்த சென்ற போலீசார் மீது, கஞ்சா போதையில் இருந்தவர்கள் தாக்குதல் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.