தொட்டபெட்டா காட்சி முனை இன்று முதல் மூடல்.. ஊட்டி செல்லும் சுற்றுலா பயணிகள் அதிருப்தி..!

Siva

செவ்வாய், 20 ஆகஸ்ட் 2024 (09:15 IST)
ஊட்டியில் உள்ள தொட்டபெட்டா காட்சி முனையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று முதல் மூன்று நாட்களுக்கு மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து ஊட்டி செல்லும் சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் பல சுற்றுலா தலங்கள் இருக்கும் நிலையில் அவற்றில் முக்கியமானது தொட்டபெட்டா காட்சி முனை என்பது அனைவரும் அறிந்ததே. ஊட்டி செல்லும் சுற்றுலா பயணிகள் தொட்டபெட்டா காட்சி முனையை பார்க்காமல் திரும்புவதில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழக வனத்துறை சார்பில் தொட்டபெட்டா சோதனை சாவடியில் பாஸ்ட்டேக் மின்னணு பரிவர்த்தனை முறை கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நிலையில் தற்போது சோதனை சாவடி மாற்றியமைக்கும் பணி நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக தொட்டபெட்டா சாலையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று முதல் நாளை மறுநாள் வரை அதாவது ஆகஸ்ட் 22 ஆம் தேதி வரை தொட்டபெட்டா செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதித்து வனத்துறையினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். இதன் காரணமாக ஊட்டி சென்ற சுற்றுலா பயணிகள் தங்களது அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர்.

Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்