இந்த மாதம் சிலிண்டர் விலை ரூ.92 குறைவு! மக்கள் நிம்மதி பெருமூச்சு!

செவ்வாய், 1 ஆகஸ்ட் 2023 (08:52 IST)
கடந்த சில மாதங்களாக தொடர்ந்து வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை உயர்ந்து வந்த நிலையில் இந்த மாதம் விலை குறைந்துள்ளது.



இந்தியா முழுவதும் வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் இரண்டிற்கும் மாதம் தோறும் விலை நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக வணிக பயன்பாடு சிலிண்டரின் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது.

கடந்த மாதம் வணிக சிலிண்டர் 1,944 ரூபாய்க்கு விற்பனையாகி வந்தது. இந்நிலையில் இந்த மாதம் தொடக்கமே வணிக கியாஸ் சிலிண்டர் விலை ரூ.92.50 ரூபாய் குறைந்துள்ளது. இதனால் சிலிண்டர் விலை ரூ.1,852க்கு விற்பனையாகி வருகிறது. அதேசமயம் வீட்டு பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை எந்த மாற்றமும் இன்றி ரூ.1.118-க்கு விற்பனையாகி வருகிறது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்