சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு! – இந்த மாதம் எவ்வளவு?

புதன், 2 டிசம்பர் 2020 (11:46 IST)
சமையல் எரிவாயு சிலிண்டர் விலை மாதம் ஒருமுறை நிர்ணயிக்கப்படும் நிலையில் இந்த மாதத்திற்கான விலை அதிகரித்துள்ளது.

இந்தியாவில் வீடுகளில் பயன்படுத்தப்படும் கேஸ் சிலிண்டர்களின் விலை மாதம் ஒருமுறை நிர்ணயிக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களாக கொரோனா காரணமாக மத்திய அரசின் சமையல் எரிவாயு திட்டத்தின் கீழ் உள்ளவர்களுக்கு இலவச சிலிண்டர் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் கடந்த மாதம் வரை ரூ.610 ஆக இருந்த சமையல் எரிவாயு சிலிண்டர் விலை இந்த மாதம் ரூ.50 உயர்ந்து ரூ.660 ஆக உள்ளது. வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை ரூ.62 விலை உயர்ந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்