ஆனால் இந்த சாதிய ஆணவ படுகொலை தொடர்பான வழக்கில் செசன்ஸ் நீதிபதி அப்துல் காதர் அவர்கள் அதனை தொடர்புடைய குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என்று தீர்ப்பு அளித்திருப்பது இங்கு காலம்காலமாக தொடர்கின்ற சாதிய ஆணவ கொலைகளை ஒரு கட்டுக்குள் கொண்டுவர வேண்டும், அதற்கு ஒரு முற்றுபுள்ளி வைத்தாக வேண்டும் என்கிற அடிப்படையில் வழங்கப்பட்ட தீர்ப்பாக நான் பார்க்கிறேன்.
அதிலும் குறிப்பாக எட்டே மாதங்களில் விசாரிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டிருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. பெரும்பாலான வழக்குகள் ஆண்டு கணக்கிலே கிடப்பிலே போடப்பட்டு விசாரணைகள் தள்ளி வைக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த வழக்கில் எட்டு மாதங்களில் விசாரித்து தீர்ப்பு அளிக்கப்பட்டிருப்பது ஒரு புரட்சிகரமான நடவடிக்கையாக நான் பார்க்கிறேன்.
மரண தண்டனையே கூடாது என்றாலும் கூட சாதி ஆணவ கொலைகளை கட்டுபடுத்துவதற்கு இந்த தீர்ப்பு ஒரு எச்சரிக்கையாக இருக்கும் என்கிற அடிப்படையிலே நீதி அரசர் வழங்கி இருக்கிற இந்த தீர்ப்பு உள்ளபடியே வரவேற்க கூடிய ஒன்று இந்திய அளவில் சாதிய ஆணவ கொலைகளை தடுக்க வேண்டும் அதற்கு இத்தகைய நீதிமன்ற தீர்ப்புகள் வழிகாட்டும் தீர்ப்புகளாக அமையும் அமையட்டும் என்று நான் கருதுகிறேன். சுட்டி காட்டுகிறேன்.” எனக் குறிப்பிட்டார்.