மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் பல்வேறு தொல்லியல் எச்சங்கள் கண்டறியப்பட்டு வருகிறது.,குறிப்பாக 2000 ஆண்டுகள் பழமையான பாறை ஓவியங்கள், தமிழி எழுத்துகள் கொண்ட கல்வெட்டுகள் மற்றும் முதுமக்கள் தாழிகள், பானை ஓடுகள், இரும்பு தொழிற்சாலைகள் இருந்தற்கான அடையாளங்கள், 50க்கும் மேற்பட்ட நடுகற்கள், நடுகற்களில் வழக்கத்திற்கு மாறாக சுமார் 8 அடி உயரம் கொண்ட சிறப்பு வாய்ந்த நடுகற்கள் என பல கண்டறியப்பட்டுள்ளது.
இது குறித்து அறிந்த கிராம மக்கள் தங்கள் பகுதியில் எங்கள் முன்னோர்கள் விட்டுச் சென்ற வரலாற்று எச்சங்களாக இந்த நடுகற்கள் மற்றும் இரும்பு துகள்கள் காணப்படுகிறது என்றும், எங்கள் பகுதியில் விரிவான அகழாய்வு மேற்கொள்ளவும், உசிலம்பட்டி பகுதியில் அருங்காட்சியகம் அமைத்து இவை அனைத்தையும் பாதுகாக்க நாங்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் சூழலில் தற்போது மதுரையில் அமையவுள்ள அருங்காட்சியகத்திற்கு இந்த நடுகற்களை எடுத்து செல்ல விட மாட்டோம் என எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.