இங்கு ஒவ்வொரு முக்கிய விசேஷ தினங்களிலும் ஸ்ரீ எல்லை மாரியம்மனுக்கு பல்வேறு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள், பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.
மேலும் எல்லை மாரியம்மன் கோவில் திருவிழா முன்னிட்டும், வைகாசி வெள்ளிக்கிழமை முன்னிட்டு ஸ்ரீ எல்லை மாரியம்மன் திருக்கோவிலில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உலக நன்மை வேண்டியும், மேலும் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், கல்வி, செல்வம், கிடைத்திட திருவிளக்கு பூஜையில் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.