9 ஆண்டுகளுக்குப் பிறகு அபிஷேக சேவை கட்டணம் உயர்வு: திருத்தணி தேவஸ்தானம் அறிவிப்பு
திங்கள், 24 அக்டோபர் 2022 (10:56 IST)
திருத்தணி முருகன் கோவிலில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு அபிஷேக சேவை கட்டணம் உயர்வு என அந்த கோவிலின் தேவஸ்ஹானம் அறிவித்துள்ளது. உயர்த்தப்பட்ட அபிஷேக கட்டணம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
9 ஆண்டுகளுக்குப் பிறகு உயர்த்தப்பட்ட அபிஷேக சேவை கட்டணம் விவரம்
பஞ்சாமிர்த அபிஷேகம் - ரூ.2,000
திருக்கல்யாண உற்சவம் - ரூ.4,000
வாகன உற்சவம் - ரூ.8,000
தங்கத்தேர் - ரூ.3,500
சந்தன காப்பு - ரூ.10,000
கேடய உற்சவம்- ரூ.1,500
தங்க கவசம், வெள்ளிக்கவசம் சாத்துப்படி - ரூ.1,000
சகஸ்ர நாம அர்ச்சனை - ரூ.750
திருத்தணி முருகன் கோவிலில் அபிஷேக சேவை கட்டணம் உயர்வுக்கு பக்தர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.