தினமும் ரூ.100 கோடி நஷ்டம்: கர்நாடகத்தில் பஸ் கட்டணம் உயர்வா?

செவ்வாய், 18 அக்டோபர் 2022 (12:23 IST)
கர்நாடக மாநில போக்குவரத்து துறைக்கு தினமும் ரூபாய் 100 கோடி நஷ்டம் ஆவதால் அம்மாநிலத்தில் பஸ் கட்டணத்தை உயர்த்த வாய்ப்பு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன 
 
இந்த நிலையில் இது குறித்து பேட்டியளித்த கர்நாடக மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் கர்நாடக அரசு போக்குவரத்து கழகங்களுக்கு தினமும் 100 கோடி இழப்பு ஏற்படுகிறது என்பது உண்மைதான் என்றும் ஆயினும் ஊழியர்களுக்கு தவறாமல் சம்பளம் வழங்கி வருகிறோம் என்றும் தெரிவித்துள்ளார்.
 
மேலும் கர்நாடக மாநிலத்தில் பஸ் கட்டணத்தை உயர்த்தும் திட்டம் எதுவும் இல்லை என்றும் எனவே பொதுமக்கள் எதிர்க்கட்சிகளின் பொய் பிரச்சாரத்தை கண்டு பயப்பட வேண்டாம் என்றும் கர்நாடக மாநிலத்தில் சேவை மனப்பான்மையுடன் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்து உள்ளார்
 
எனவே இப்போதைக்கு கர்நாடக மாநிலத்தில் பஸ் கட்டணம் உயர வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்