மீனாட்சி திருக்கல்யாண சப்பர திருவிழாவில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி தரிசனம்

J.Durai

செவ்வாய், 23 ஏப்ரல் 2024 (14:55 IST)
திருத்தங்கல் சப்பார திருவிழாவையொட்டி முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சாமி தரிசனம் செய்தார். 
 
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் ஸ்ரீ கருநெல்லிநாதர்  சுவாமி திருக்கோவிலில் இன்று மீனாட்சி திருக்கல்யாண சப்பர திருவிழா நடைபெற்றது. 
 
இதில் அலங்கரிக்கபட்ட  சப்பரத்தில் சர்வ அலங்காரத்தில் கருநெல்லிநாதர் சுவாமி மீனாட்சியம்மன் எழுந்தருள தேரடி வீதியில் உலா நடைபெற்றது. 
 
இதில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். 
 
மேலும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளாமன பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்