தமிழ்நாட்டில் நீட் இல்லாத நிலை உருவாகும்: திமுக எம்.பி. கனிமொழி உறுதி!

ஞாயிறு, 6 ஜூன் 2021 (16:22 IST)
தமிழ்நாட்டில் நீட் இல்லாத நிலை உருவாகும் என திமுக எம்பி கனிமொழி உறுதி அளித்துள்ளார்
 
தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வு ரத்து செய்யப்பட்டதை அடுத்து நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டுமென கோரிக்கை விடப்பட்டு வருகின்றது. ஏற்கனவே இது குறித்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். பிளஸ் டூ தேர்வு ரத்தான நிலையில் நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வு ரத்து செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
 
இந்த நிலையில் தமிழ்நாட்டில் நீட் இல்லாத நிலை உருவாகும் என தூத்துக்குடி திமுக எம்பி கனிமொழி உறுதி கூறியுள்ளார். திமுகவின் தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி நிச்சயமாக நீட்தேர்வு இல்லாத ஒரு சூழ்நிலையை தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் உருவாக்குவார் என்று திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்
 
நாடு முழுவதும் நீட் தேர்வின் மூலம் மருத்துவ படிப்புக்கு அட்மிஷன் போடப்பட்டு இருக்கும் நிலையில் சுப்ரீம் கோர்ட்டும் நீட்தேர்வு உண்டு என்று தீர்ப்பளித்துள்ள நிலையில் தமிழகத்தில் மட்டும் எப்படி நீட்தேர்வு இல்லாத நிலை உருவாகும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்