தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை...

ஞாயிறு, 6 ஜூன் 2021 (16:17 IST)
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 
வெப்பச்சலனம் வளிமண்டல சுழற்சி காரணமாகவும் தமிழ்நாட்டின் ஒரு சில வட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை இன்று பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். 
 
வருகிற 8 மற்றும் 9ம் தேதிகளில் (செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில்) தமிழ்நாட்டின் தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்  லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்