ஸ்ரீமதிக்கு கொடுமைகள் நடந்ததற்கான சூழ்நிலை இருந்துள்ளது - குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம்

புதன், 27 ஜூலை 2022 (21:10 IST)
கள்ளக்குறிச்சி அருகே உள்ள பள்ளியில் தற்கொலை செய்துகொண்ட மாணவி ஸ்ரீமதிக்கு கொடுமைகள் நடந்ததற்கான சூழ் நிலை இருந்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி அருகே பன்னிரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த ஸ்ரீமதி என்ற மாணவி திடீர் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இதற்காக நீதி கேட்டு நடந்த போராட்டம் வன்முறையாக மாறியது
நீதிமன்றத்தின் உத்தரவுப்படி ஸ்ரீமதி உடலை பெற்றுக்கொள்ள பெற்றோர் சம்மதித்ததை அடுத்து இன்று காலை பெற்றோரிடம் ஸ்ரீமதி உடல் வழங்கப்பட்டது.

இதனை அடுத்து ஸ்ரீமதியின் உடலுக்கு சடங்குகள் செய்து அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்த நிலையில், மாணவிக்கு கொடுமைகள் நடந்ததற்கான சூழ் நிலை இருந்துள்ளது என குழந்தை உரிமைகள் பாதுககாப்பு ஆணையர் தலைவர் பிரியங்கனு தெரிவித்துள்ளார்.

மாணவி மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக, குழந்தை உரிமைகள் பாதுககாப்பு ஆணையர் தலைவர் பிரியங்கனு உள்ளிட்ட   ஏழு பேர் கொண்ட குழுவினர், மாணவியின் பெற்றோர், சகோதரர் மற்றும் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், காவலர், பள்ளி  நிர்வாகம், பள்ளி ஆசிரியர்கள் உட்பட அனைவரிடமும் விசாரணை நடத்தப்படும் என்றும், மாணவிக்கு கொடுமைகள் நடந்ததற்கான சூழ் நிலை இருந்துள்ளது. அதனைப்பற்றி விசாரித்த பின் தான் முடிவுக்கு வர முடியும் ; போலீஸார் சிலர் தவறு செய்துள்ளதாகவும் கூறியுள்ளனர்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்