வேலூரில் லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஓட்டுச்சாவடிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, ஓட்டுபதிவு மற்றும் கட்டுப்பாட்டு இயந்திரம் கையாள்வது குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆசிரியர்கள், எந்த விடுமுறையையும் ஆகஸ்டு 5 வரை எடுக்கக்கூடாது என மாவட்ட தேர்தல் அதிகாரி சண்முக சுந்தரம் உத்தரவிட்டுள்ளார். இதனால் பள்ளி கல்வித்துறைக்கு கீழ் இயங்கும், அனைத்து வகை பள்ளி ஆசிரியர்களுக்கும், பணியாளர்களுக்கும், எந்த விதமான விடுமுறையையும் அளிக்க வேண்டாம் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மார்க்ஸ், அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார் என தெரியவருகிறது.