திரையரங்குகளை திறக்க வாய்ப்பில்லை - கடம்பூரார் கறார்!

புதன், 22 ஜூலை 2020 (14:55 IST)
தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க தற்போது வாய்ப்பில்லை என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். 
 
தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 4965 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதனால் தமிழகத்தில் மொத்த பாதிப்பு 1,80,643 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது. ஒரே நாளில் கொரோனா தொற்றால் 75 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே, உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,626 ஆக அதிகரித்துள்ளது. 
 
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் மட்டும் 1,130 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செயப்பட்டுள்ளது. இதுவரை 88,377 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 1,475 பேர் உயிரிழந்துள்ளனர். சென்னையில் தற்போது கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. 
 
இந்நிலையில் திரையரங்குகளை திறப்பது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜூ பதில் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, தமிழகத்தில் திரையரங்குகளை திறக்க தற்போது வாய்ப்பில்லை. கொரோனா பாதிப்பு குறைவதை பொறுத்து திரையரங்குகளை திறப்பது பற்றி முதல்வர் முடிவெடுப்பார். 
 
வெளிநாடுகளைப் போன்று இடைவெளி விட்டு படம் பார்த்தால், உரிமையாளருக்கு லாபம் கிடைக்காது எனவே திரையரங்குகளை தற்போது திறக்க இயலாது என அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்