கேரள மாநிலம் வயநாடு தொகுதியின் எம்பி ஆக இருந்த ராகுல் காந்திக்கு, குற்றவியல் அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்திருந்தது குஜராத் உயர்நீதிமன்றம். இந்த தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்த நிலையில் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை நிறுத்தி வைத்த சுப்ரீம் கோர்ட் அதிரடியாக பல கேள்விகளையும் எழுப்பியது.
இந்த நிலையில் முன்பு குடியிருந்த அதே பங்களா கிடைக்குமா என்று செய்தியாளர்கள் ராகுல் காந்தியிடம் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த அவர், இந்தியா முழுவதும் என் வீடுதான் என்று கூறினார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.