பேருந்து ஓட்டும்போடு செல்போனில் மூழ்கிய ஓட்டுநர் ... வைரலாகும் வீடியோ
வியாழன், 16 ஜனவரி 2020 (17:19 IST)
பழனியில் செல்போனை பார்த்தபடி தனியார் பேருந்து ஓட்டுநர் ஒருவர் பேருந்தை இயக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் இருந்து திண்டுக்கல் நோக்கிச் சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து ஓட்டுநர் செல்போனில் வீடியோ பார்த்த படி பேருந்தை ஓட்டினார்.
அதைப் பார்த்த பயணிகள் ஓட்டுநரிடம் எச்சரிக்கை விடுத்தனர். ஆனாலும் காதில் வாங்கிக் கொள்ளாத ஓட்டுநர் ராமகிருஷ்ணன் தொடர்ந்து செல்போன் பார்த்தபடி பேருந்தை இயக்கினார்.
அதனால் கோபம் அதிர்ச்சி அடைந்த பயணிகள் அதை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டனர். தற்போது இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.