கோலாட்டம், ஒயிலாட்டம், கொண்டாட்டம் – ஸ்டாலினின் சமத்துவ பொங்கல்!

வியாழன், 16 ஜனவரி 2020 (12:01 IST)
திமுக சார்பில் முக ஸ்டாலின் தலைமையில் சமத்துவ பொங்கல் கோலாகலமாக கொண்டாடப்பட்டுள்ளது.

தமிழகமெங்கும் பொங்கல் திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. பிரபல அரசியல் தலைவர்கள் பலரும் தமிழக மக்களுக்கு தங்கள் பொங்கல் வாழ்த்துகளை பகிர்ந்துள்ளனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் விழாவை தனது சொந்த ஊரான எடப்பாடியில் கொண்டாடி வருகிறார்.

திமுக தலைவர் முக ஸ்டாலின் காஞ்சிபுரம் வல்லக்கோட்டை ஊராட்சியில் உள்ள சமத்துவபுரத்தில் சமத்துவ பொங்கலை தனது கட்சியினர் மற்றும் பொதுமக்களுடன் கொண்டாடியுள்ளார். கோலாட்டம், ஒயிலாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளுடன் நடைபெற்ற இந்த விழாவில் மக்களுக்கு பொங்கல் பரிசுகளை வழங்கினார் முக ஸ்டாலின்.

பிறகு பேசிய அவர் ”தமிழர்கள் சாதி, மத வேறுபாட்டால் பிரிந்து கிடப்பதை தவிர்க்கவே பெரியாரும், அண்ணாவும் போராடினார்கள். அவர்கள் போராட்டத்தின் நீட்சியாக கலைஞர் அவர்களால் நாடெங்கிலும் சமத்துவபுரம் ஏற்படுத்தப்பட்டது. சாதி, மத பேதமின்றி மக்கள் அனைவரும் ஒற்றுமையோடு வாழ வேண்டும் என்பதே சமத்துவபுரத்தின் நோக்கமாகும்” என பேசியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்