கோயில் உண்டியலில் மன்னிப்புக் கடிதத்துடன் திருடிய பணத்தை போட்ட திருடன் !

வியாழன், 23 ஜூன் 2022 (18:56 IST)
ராணிப்பேட்டையில்    உள்ள கோயில் உண்டியலில் பணத்தை திருடிய திருடன் மன்னிப்புக் கடிதத்துடன் மீண்டும் அதே உண்டியலில் பணத்தைப் போட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருடன் அந்தக் கடிதத்தில்,. ''நான் சித்ரா பெளர்ணமி கழித்து நான் தெரிந்தே கோயில் உண்டியலை  உடைத்துப் பணத்தை திருடி விட்டேன்.

அப்போது இருந்த  எனக்கு, மனசு சரியில்லை. நிம்மதியில்லை, அப்புறம் வீட்டில் நிறைய பிரச்சனை வருகிறது. வீட்டில் நிறைய பிரச்சனை வருகிறது. எனவே, நான் மனம் திருந்தி எடுத்த பணத்தை அதே  உண்டியலில் ரூ. 10,000 போட்டு விடுகிறேன். எல்லோரும் என்னை மன்னித்துவிடுங்கள்.கடவுள் என்னை மன்னிப்பாரா எனத் தெரியாது. வணக்கம்'' எனத் தெரிவித்துள்ளார்.

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்