பள்ளிக்கே செல்லாமல் மாற்று நபரை வைத்து ஆள்மாறாட்டம் செய்த ஆசிரியர்! - ஆய்வில் வெளியான அதிர்ச்சி உண்மை!

Prasanth Karthick

வியாழன், 7 நவம்பர் 2024 (09:11 IST)

தர்மபுரியில் அரசு பள்ளி ஆசிரியர் ஒருவர் பள்ளிக்கே செல்லாமல் தனக்கு பதிலாக வேறு நபரை வைத்து பாடம் எடுத்து வந்தது கல்வித்துறை ஆய்வில் அம்பலமாகியுள்ளது.

 

 

தமிழ்நாடு முழுவதும் ஏராளமான அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில், அதில் பல ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். பல ஆசிரியர்கள் தங்கள் வேலை நேரத்தையும் தாண்டி மாணவர்களின் நலனுக்காக உழைத்து வரும் நிலையில், சில ஆசிரியர்கள் அவர்களது நற்பெயரை கெடுக்கும் விதமாக இழிவான செயல்களிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

 

ஆசிரியர்கள் மாணவர்களுக்கு சரியாக பாடம் நடத்துகிறார்களா? சரியாக பள்ளிக்கு வருகிறார்களா? என்பது குறித்து சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் அனைத்து அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளிலும் ஆய்வு செய்துள்ளனர். அதில் கற்பித்தல் பணிக்கு செல்லாமல் நீண்ட நாட்கள் விடுப்பில் இருப்பவர்கள், பள்ளிக்கு வந்தது போல கணக்கு காண்பித்து ஏமாற்றுபவர்கள் என குற்றச்சாட்டுக்கு ஆளான ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டு வருகிறது.

 

அவ்வாறாக தர்மபுரி மாவட்டத்தில் காரிமங்கலம் வட்டாரத்தில் உள்ள ராமியம்பட்டி பஞ்சாயத்து நடுநிலைப்பள்ளியில் ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்த பாலாஜி என்பவர் பள்ளிக்கே வராமல் இருந்து வந்தது தெரிய ஆய்வில் தெரியவந்துள்ளது. மேலும் அவர் பள்ளிக்கு செல்லாமல் வேறு நபரை அனுப்பி தனது பெயரில் வருகைப்பதிவு செய்து கொண்டதும், பாடம் எடுக்க வைத்ததும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவரை பண் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர் கல்வித்துறை அதிகாரிகள்.

 

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்