காலையிலேயே காத்திருக்குது சூப்பர் மழை.. எந்தெந்த மாவட்டங்களில்?

Prasanth Karthick

திங்கள், 15 ஏப்ரல் 2024 (09:15 IST)
தமிழ்நாட்டில் கோடை வெப்பம் சுட்டெரித்து வரும் நிலையில் சில மாவட்டங்களில் கோடை மழை பெய்து குளிர்வித்தும் வருகிறது.



கடந்த சில வாரங்களில் வெப்பநிலை வேகமாக அதிகரித்து வருவதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே செல்லவே சிரமப்பட்டு வருகின்றனர். பல பகுதிகளில் வெப்பம் 100 டிகிரியை தாண்டியுள்ளது. இந்நிலையில் மகிழ்ச்சி செய்தியாக ஆங்காங்கே கோடை மழையும் பெய்து நிலத்தை குளிர்வித்து வருகிறது.

வானிலை ஆய்வு மைய அறிவிப்பின்படி இன்று காலை 4 மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி, கன்னியாக்குமரி, திருநெல்வேலி, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை ஆகிய 4 மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரை லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை வறண்ட வானிலையே நிலவும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Edit by Prasanth.K

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்