’ட்யூப் லைட்டை’ கையால் குத்தி போலீஸ்காரர் தற்கொலை முயற்சி : நெல்லையில் பரபரப்பு

திங்கள், 10 டிசம்பர் 2018 (16:50 IST)
அண்மைக் காலமாகவே மன அழுத்தத்தால் போலீஸார் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. சில வருடங்களுக்கு முன்பு துணை ஏடிஎஸ்பி விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டது, சில நாட்களுக்கு முன் நஸ்ரியா என்ற திருநங்கை சக போலீஸாரால் பாதிக்கப்பட்டதாகவும் தன் சாவுக்கு அவர்களே காரணம் என்று கடிதம் எழுதிவைத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார். இந்நிலையில் தற்போது நெல்லை மாவட்டத்தில் நாங்குநேரி காவல் நிலையத்தில் பணியாற்றிவரும் காவலர் விடுப்பு கிடைக்காத மன விரக்தியில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள நாங்குநேரி காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும் வெங்கடேசன் என்பரின் சொந்த ஊர் சிவகிரி. ஆனால் பணியில் காரணமாக நாங்குநேரியில் தங்கியிருந்து பணியாற்றி வருகிறார்.
 
இந்நிலையில் தன் சகோதரியின்  வீட்டில் நடக்கும் நிகழ்ச்சியில் நடக்கும் நிகழ்ச்சிக்காக முன்று நாட்கள் விடுப்பு கேட்டுள்ளார். ஆனால் இன்ஸ்பெக்டர் விடுப்பு தருவதில் பாரபட்சத்துடன் நடந்து கொண்டதுடன் வெங்கடேசனை கடுமையாக திட்டியதுடன் காவல் நிலையத்தில் இருக்கும் டியூப் லைட்டை மாற்ற சொன்னதாக  தெரிகிறது. அந்த டியூப் லைட்டை மாற்றும் போது தன் கையை அதில் குத்தி காயம் ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.  அவர் கையில் ரத்தம் கொட்டவே அருகில் இருந்த போலீஸார் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
 
இச்சம்பவம் தொடர்பாக துணை ஆணையர் விசாரித்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்