தமிழ்நாட்டில் நிலவும் கடும் வெப்பநிலை காரணமாக பள்ளிகள் திறப்பு தள்ளி வைக்கப்படுமா என்பது குறித்து அமைச்சர் அன்பில் மகேஸ் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக பள்ளிகளில் பொதுத்தேர்வுகள், ஆண்டு தேர்வுகள் முடிவடைந்த நிலையில் மாணவர்களுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலக்கட்டத்திற்குள் சிறப்பு வகுப்புகளுக்காக மாணவர்களை வெயிலில் வகுப்புகளுக்கு வர சொல்லக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மே மாத விடுமுறை கழித்து ஜூன் 2ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்துன் வருகிறது. மே மாதம் முடிந்த பின்பும் ஜூன் பாதி வரையிலும் வெப்ப சலனம் நிலவும் என கூறப்படுகிறது. இதனால் பள்ளிகள் மறுதிறப்பு தேதி தள்ளிவைக்கப்படுமா என்ற கேள்வியும் பெற்றோர்கள் இடையே உள்ளது. இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், ஜூன் மாத வாக்கில் வெயிலின் தாக்கத்தை பொறுத்து, முதல்வர் அறிவுறுத்தலின் படி பள்ளிகள் திறக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
Edit by Prasanth.K