இந்த நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின், இசைஞானி இளையராஜா அவர்களுக்கு தனது எக்ஸ் பக்கத்தின் மூலம் நேற்றும் இன்றும் என்றும் தங்கள் இசை ராஜாங்கத்தின் ஆட்சிதான் என வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் தனது வாழ்த்து செய்தியில் மேலும் கூறியிருப்பதாவது
நாட்டுப்புற இசை, மெல்லிசை, துள்ளலிசை, மரபிசை, தமிழிசை, மேற்கத்திய இசை என அனைத்திலும் கரைகண்டு தமிழர்களின் பெருமைமிகு அடையாளமாகத் திகழும் இசைஞானி திரு. இளையராஜா அவர்களுக்கு என் நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!