தமிழக அளவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் என்பது ஒரு சில வாரங்களில் அறிவிப்பு வெளியாக உள்ள நிலையில், திமுக, அதிமுக, பாஜக, தேமுதிக ஆகிய கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு கட்சி வேலைகளில் சுறுசுறுப்பு காண்பித்து வருகின்றன. திமுக மாவட்ட பொறுப்பாளரும், தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, சென்னை அதைவிட்டால் கோவை ஆகிய இடங்களில் மட்டுமே தனது பார்வையை வைத்துள்ளார். சென்னையில் திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் முதல் 10 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை பங்கேற்று, அடுத்த விமானத்திலேயே கோவைக்கு விமான மார்க்கமாக வந்து, கோவையில் நகர்ப்புற உள்ளாட்சி வேலைகளை பணியாற்றி வருகின்றார், இந்நிலையில் வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு நாட்கள் மட்டும் கரூருக்கு தனது கவனத்தை செலுத்தும் செந்தில் பாலாஜி, அதில் அரசு நிகழ்ச்சிகள் மட்டுமே அதிகம் என்கின்றனர் திமுகவினர். கட்சி நிகழ்ச்சிகள் ஒருசிலவற்றில் மட்டுமே பங்கேற்று முழு கவனத்தையும் கோவை மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தனது கவனத்தை செலுத்தி வருவதாகவும், கரூர் கோட்டை விட்டு விடுவாரோ என்கின்றனர் திமுகவினர். இந்நிலையில், கரூர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர், கரூர் மாவட்டத்தில் உள்ள பட்டி தொட்டிகள் எல்லாம் தனது அரசியல் பயணத்தை தீவிரமாக கவனம் செலுத்தி தினம் தோறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் தனது பார்வையைச் செலுத்தி வருகின்றார். நேற்று இரவு கூட, அரவக்குறிச்சி கிழக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் கலையரசன் தலைமையில் நடைபெற்ற அதிமுக நிகழ்ச்சியில் பங்கேற்று, கிளைக் கழக தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகளுக்கு பாராட்டு தெரிவித்தார். அப்போது நமது (அதிமுக) ஆட்சியில், பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்பட்ட ரூபாய் 2500 மற்றும் பொங்கல் தொகுப்புகளும், தற்போது திமுக அரசால் வழங்கப்படும் பொங்கல் தொகுப்புகளில் பல்லி, பூச்சி, வண்டுகள் இருப்பதாகவும் தெரிவித்து இதன் மூலமாகவே தற்போது தமிழக மக்கள் திமுக கட்சியை உணரத் தொடங்கி உள்ளதாக முன்னாள் அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் கூறினார். இதுமட்டுமல்லாமல், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களால் கொண்டுவரப்பட்ட தாலிக்கு தங்கம் திட்டம் ஆனது, ஏழைகளுக்கு பயனுள்ள வகையில் இருந்தது, ஆனால் அந்தத் திட்டத்தைத் கெடுக்கும் வகையிலும், பல்வேறு கண்டிஷன்கள், போட்டு ஏழை மக்கள் தற்போது திண்டாடி வருவதாகவும் தெரிவித்தார். அம்மா மினி கிளினிக், அம்மா உணவகம் என்று ஏழைகளுக்காக கொண்டுவரப்பட்ட அனைத்து திட்டங்களையும் தற்போதைய திமுக அரசு முடக்க நினைக்கிறது. தற்போது திமுக ஆட்சி பிடித்தது 2 சதவிகித வாக்கு உயர்வால் மட்டுமே தான், வரை இருக்கக்கூடிய நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை தேர்தல் ஆகியவைகளில் அதிமுக கட்சியே பெரும்பாலும் அதிக இடம் பிடித்த மீண்டும் அரியணையில் அமரும் என்றார். தமிழக மக்கள் தற்போது திமுக கட்சியின் நிலைப்பாடு என்ன என்பதை கொண்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் திமுக பிரமுகர்கள், அதிமுகவினர் உட்கட்சித் தேர்தல், ஆங்காங்கே கட்சி பிரமுகர்களை பார்த்து அவ்வப்போது ஆலோசனை கூட்டம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று வரும் நிலையில், திமுக மாவட்ட பொறுப்பாளரும் கரூரில் உள்ள அமைச்சருமான செந்தில் பாலாஜி முழு கவனமும் கோவையில் மட்டுமேதான் உள்ளது என்றும் கரூர் மாவட்டத்தில் கொஞ்சம் திரும்பிப் பார்க்கச் சொல்லுங்கள் என்று புலம்பும் வண்ணம் உள்ளனர்