திருத்தணி சென்றடைந்த எல்.முருகன்! – ட்ரெண்டான #துள்ளி_வருது_வேல்

வெள்ளி, 6 நவம்பர் 2020 (12:57 IST)
தமிழகத்தில் பாஜகவின் வேல் யாத்திரைக்கு தடை விதிக்கப்பட்ட நிலையில் பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் திருத்தணியை சென்றடைந்த நிலையில் #துள்ளி_வருது_வேல் என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகியுள்ளது.

தமிழகத்தில் பாஜக சார்பில் இன்று திருத்தணியில் இருந்து வேல் யாத்திரை தொடங்குவதாக திட்டமிடப்பட்டிருந்தது. இந்நிலையில் கொரோனா பரவல் அபாயம் உள்ளதால் வேல் யாத்திரைக்கு அனுமதி அளிக்க முடியாது என்றும், மீறி யாத்திரை நடத்த முயன்றால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்திருந்தது.
அரசின் உத்தரவை மீறி திருத்தணியில் பாஜகவினர் கூட வாய்ப்புள்ளதால் கடும் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் திருத்தணிக்கு வேல் யாத்திரை புறப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நசரத்பேட்டையில் பாஜகவினர் ட்போலீஸாரால் தடுக்கப்பட்ட நிலையில் எல்.முருகனோடு 5 வாகனங்கள் மட்டும் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது திருத்தணி முருகன் கோவிலை சென்றடைந்த எல்.முருகன் அங்கு வழிபாடு நடத்தி வருகிறார். வழிபாட்டிற்கு பிறகு அவர் அங்கிருந்து வேல் யாத்திரையை தொடங்க போவதாக பேசிக் கொள்ளப்படுகிறது. அவருக்கு வழிபாட்டிற்கு மட்டும்தான் அனுமதி வழங்கப்பட்டதா அல்லது யாத்திரைக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என்று பலர் சந்தேகத்துடன் வினவி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்