நீடிக்கும் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனையின் முடிவு... மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் உயிரிழந்த விவகாரம் !

வெள்ளி, 20 மார்ச் 2020 (21:30 IST)
நீடிக்கும் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனையின் முடிவு... மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் உயிரிழந்த விவகாரம் !

சர்க்கரை நோயாளியாக அவதியுற்ற வட்டார வளர்ச்சி அலுவலருக்கு மாத்திரை மருந்துகள் கொடுக்காமல் அவரை உயிரிழக்க செய்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் – முறையான நீதிவேண்டுமென்றும் பாரதீய ஜனதா அமைப்பு சாரா தொழிற்சங்கம் போராட்டத்தினால் கரூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாரதீய ஜனதா கட்சியின் அமைப்பு சாரா தொழிலாளர் சங்கத்தின் மாநில செயலாளரும், கரூர் மாவட்ட பா.ஜ.க முன்னாள் தலைவருமான ஆர்.கே.மதுக்குமார் அவர்களின் மனைவியும், க.பரமத்தி ஊராட்சியின் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்த நிலையில், லஞ்சம் வாங்கியதாக கைது செய்யப்பட்ட நிலையில் மாரடைப்பால் உயிரிழந்த ம.ஜெயந்தி ராணியின் பிரேதம், கரூர் மருத்துவக் கல்லூரியின் மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நீதிவேண்டி, பா.ஜ.க கட்சியினர் மற்றும் பாரதீய ஜனதா அமைப்பு சாரா தொழிற்சங்கத்தினர் திடீரென்று மருத்துவமனையினை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் காவல்துறையினர் குவிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தது தொடர்பாக அரசு கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் அரங்கில் குற்றவியல் நீதிமன்றம் எண் 2 ன் நீதிபதி சரவண பாபு தலைமையில் விசாரணை நடந்தது. உயிரிழந்த ம.ஜெயந்திராணியின் கணவர், மகள் மற்றும் உறவினர்கள் என்று மொத்தம் 5 நபர்களிடம் விசாரணை நடத்தினார். பின்னர் பாரதீய ஜனதா அமைப்பு சாரா தொழிற்சங்கம் சார்பில் கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆர்.பாண்டியராஜிடம் லஞ்ச ஒழிப்பு போலீஸார் மீது நடவடிக்கை எடுக்க கோரி மனு கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் மதியம் வரை பிரேத பரிசோதனை நடத்த விடாமல் பா.ஜ.க கட்சியினர் பெரும் பிரச்சினையில் ஈடுபட்ட நிலையில், ஏற்கனவே, வட்டார  வளர்ச்சி அலுவலர் ஒரு சர்க்கரை நோயாளி என்றும் நேரம் கடந்தும் அவருக்கு மாத்திரை கொடுக்கவில்லை என்றும் அதனால் தான் அவர் உயிரிழந்துள்ளார். மேலும் நேற்று மதியம் 2 மணிக்கு தொடங்கிய லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணையானது இரவு 7 மணி வரை தொடர்ந்து, நீடித்த நிலையில் அவருக்கு உணவு மற்றும் குடிக்க குடிநீர் கூட கொடுக்காமல், அவர் பதற்றத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார் என்றும் அவர் மீது பொய் புகார் கொடுக்கப்பட்டது உண்மை என்றும், அந்த லஞ்ச ஒழிப்பு போலீஸார் ஒரு கவரை பிரித்து பார்க்குமாறு கூறியதன் அடிப்படையில் அவர் ஒரு வட்டார வளர்ச்சி அலுவலர் என்கின்ற முறையில் அவர் மனு என்று பிரித்து பார்த்துள்ளார்.

மேலும், அவர் ஒரு மன்னிப்பும் கேட்ட நிலையில், பெண் என்றும் பார்க்காமல், அவர் மீது வேண்டுமென்றே வழக்கு தொடர்ந்ததினால் தான் அவர் உயிரிழந்துள்ளார் அவர் இறப்பிற்கு நியாயம் கிடைக்க வேண்டுமென்றும் மருத்துவமனையினை முற்றுகையிட்டு ஆர்பாட்டம் மற்றும் அதனை தொடர்ந்து சாலைமறியலில் ஈடுபட முயன்றனர். அதனை தொடர்ந்து காவல்துறை உயரதிகாரிகள் சமரச பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதன் அடிப்படையில் தகுந்த நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் அடிப்படையில், போராட்டத்தினை கலைத்து, பின்னர் ஜெயந்தி ராணியின் பிரேத பரிசோதனை நடைபெற்றது.

இந்த போராட்டத்தில் மற்றும் மருத்துவமனையினை முற்றுகையிட்டதில்., பாரதீய ஜனதா மின்வாரிய பிரிவு மாநிலத்தலைவர் சேலம்கே.ராஜு, கரூர் மாவட்ட பாரதீய ஜனதா கட்சியின் அமைப்பு சாரா தொழிற்சங்கம் பொதுச்செயலாளர் காவிரி ஜெ.மோகன்ராஜ் உள்ளிட்டோர் ஏராளமானோர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர். இந்த சம்பவத்தினால் காலை முதல் மாலை வரை அரசு மருத்துவமனை வளாகம் சுமார் 10 மணி நேரம் பரபரப்பு நீடித்தது.
 

 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்