நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான பரப்புரை ஓய்ந்தது

வியாழன், 17 பிப்ரவரி 2022 (18:48 IST)
தமிழகம் முழுவதும்  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தேர்தல் பரப்புரை நிறைவடைந்துள்ளது.

தமிழகத்தில் வரும் 19 ஆம் தேதி  நகராட்சி நடைபெற உள்ள நிலையில்  இதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது.

இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு இன்று முதல் வரும் 19 ஆம் தேதி வரை டாஸ்மாக் கடைகள் இயங்கத் தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகம் முழுவதும்  நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான தேர்தல் பரப்புரை நிறைவடைந்துள்ளது.

பிப்ரவரி 22 ஆம் தேதி அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகள் மற்றும் 5 கிமீ சுற்றளவில் உள்ள பகுதிகளிலும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. 21 நகராட்சிகள், 138 நகராட்சிகள் , 490 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. இதில், 2.50 கோடிக்கும் அதிகமான மக்கள் வாக்களிக்கவுள்ளனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்