தி.மு.க.வை நாட்டை விட்டே துரத்த வேண்டும் - முதல்வர் பழனிசாமி

திங்கள், 13 மே 2019 (18:18 IST)
உலகில் மிகப்பெரிய ஜனநாயகத் தேர்தல் நம் தேசத்தில் நடைபெற்று வருகிறது. ஆறு  கட்ட தேர்தல் நடைபெற்றுள்ளன. இன்னும் ஒரு கட்ட தேர்தல் நடைபெறவுள்ளன. தமிழகத்தில் கடந்த ஏப்ரல் 18 ஆம் தேதி மக்களவைத் தேர்தலுடன் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. இன்னும் 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வரும் 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது.
அதற்கான அனைத்துக் கட்சி தலைவர்களும்  தீவிரமாக பிரசாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். 
 
இந்நிலையில் ஒட்டப்பிடாரம்  சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் மோகனை ஆதரித்து முதல்ர்வர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார்.
 
அப்போது அவர் பேசியதாவது :
 
நாட்டு மக்களுக்கு தினகரனை அடையாளம் காட்டியது; பதவி கொடுத்தது ;  அம்மாவின் இவ்வியக்கம் அவருக்கு விலாசத்தைக் கொடுத்தது.  இந்த இரட்டை இலை சின்னம் தான் அவருக்கு அடையாளத்தை கொடுத்தது. ஆனால் தற்போது இந்த இயக்கத்தை முடுக்க அவர் வழக்குப் போட்டுள்ளார்.
 
தீயசக்தியான திமுகவை நாட்டை விட்டே துரத்த வேண்டும். அப்படிப்பட்ட இயக்கத்துடன் தான் தினகரன் கூட்டணி வைத்துக்கொண்டு செயல்பட்டுக் கொண்டுள்ளார்.
 
தற்போது எதிரியுடன் சேர்ந்து அழிக்க வேண்டும் என தினகரன் எண்ணுகிறார். இது துரோகச் செயல்தானே?  இவர்களுக்கு வரும் தேர்தலில் பாடம் புகட்ட வேண்டும் என்று தெரிவித்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்