சிறுவர்களை மாட்டுச் சாணத்தை சாப்பிட வைத்த கொடூரம் !

வெள்ளி, 2 ஏப்ரல் 2021 (23:35 IST)
தெலுங்கானா மாநிலம் மஹாப்பூபாபாத் என்ற பகுதியில் இரு சிறுவர்களை மட்டுச்சாணத்தை சாப்பிட வைத்து கொடுமை செய்த இருவரை போலீஸார் கைது செய்துள்ளார்.

தெலுங்கானா மாநிலம் மஹாப்பூபாபாத் என்ற பகுதியில் இரு சிறுவர்கள் தங்கள் வீட்டில் வளர்த்து வந்த நாயை தேதி வந்தனர். அபோது தோட்டத்தில்காவல் வேலை செய்தவர்கள் அந்த இரு சிறுவர்களையும் சந்தேகப்பட்டு அங்குள்ள மரத்தில் கட்டிவைத்து, அடித்துச்சித்ரவதை செய்தனர். பின்னர் சிறுவர்களைமாட்டுச்சாணத்தைச் சாப்பிட வைத்து அதை செல்போனில் படம் பிடித்து தன் நண்பர்களுக்கு அனுப்பியுள்ளனர்.

இதுகுறித்து சிறுவர்களின் தாயார்களில் ஒருவர் போலீஸில் புகார் அளித்தார். இதனைத்தொடர்ந்து போலீஸார் சம்பந்தப்பட்டவர்களைக்கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்