''தமிழில் அர்ச்சனை ''என்ற பெயர்ப் பலகை வெளியிட்ட முதல்வர்

செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (23:15 IST)
தமிழகத்தில் உள்ள கோவில்களில் வரும் வெள்ளிக்கிழமை  முதல் தமிழில் அர்ச்சனை செய்யப்படும் என இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவர்கள் தெரிவித்துள்ளார்.
 

தமிழகத்தில் திமுக ஆட்சியில் தொடங்கியதிலிருந்து இந்து அறநிலை துறை அமைச்சர் சேகர்பாபு சுறுசுறுப்பாக செயல்பட்டு வருகிறார் என்பதும் ஆக்கிரமிக்கப்பட்ட கோவில் நிலங்களை மீட்டு எடுப்பதில் இருந்து வெளிநாட்டுக்கு கடத்தி செல்லப்பட்ட சிலைகளை மீட்டெடுப்பது வரை பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்பது தெரிந்தது

அந்த வகையில் தற்போது தமிழ்நாட்டில் உள்ள கோயில்களில் அடுத்த வாரம் முதல் தமிழில் அர்ச்சனை தொடங்கப்பட உள்ளதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சமீபத்தில் அறிவித்தார்.

இதுகுறித்து அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளதாவது:

தமிழகத்தில் உள்ள 47 கோயில்களில் முதற்கட்டமாக வரும் வெள்ளிக்கிழமை முதல் அன்னைத் தமிழ் அர்ச்சனை செய்யப்படும் எனவும், கோயிகளில் அன்னைத் தமிழில் அர்ச்சனை என்ற அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டு கோயில்களிலுள்ள அர்ச்சகர்களின் பெயர், தொலைபேசி எண்கள் தெரிவிக்கப்படும் எனத் தெரிவிக்கபப்ட்டுள்ளது.

மேலும் அன்னைத் தமிழில் அர்ச்சனை என்ற பெயர்ப் பலகையை ஸ்டாலின் இன்று வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் இன்று, “அன்னைத் தமிழில் அர்ச்சனை” திட்டத்தின் அறிவிப்பு பலகையை வெளியிட்டார்.

இதைத் தொடர்ந்து, வரும் வெள்ளிக்கிழமை (06.08.2021) அருள்மிகு கபாலீஸ்வரர் திருக்கோயிலில் இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டு (1/2) pic.twitter.com/D8887xTeYJ

— P.K. Sekar Babu (@PKSekarbabu) August 3, 2021

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்