மத்திய பிரதேச மா நிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் தலைமையிலான பாஜக ஆட்சி நடந்து வருகிறது. இங்குள்ள சட்டார்பூர் மாவட்டத்தில் சில மாதங்களுக்கு முன் 4 வயது சிறுமி உயிரிழந்தார், அப்போது ஆம்புலன்ஸ் வசதியின்ரி உறவினர்கள் சிறுமியின் உடலை தோளில் சுமந்து சென்றனர்.
இதேபோல் மற்றொரு சம்பவம் தற்போது நடந்துள்ளது. அம் மா நிலத்தில் உள்ள பதான் என்ற பகுதியில் 4 வயது சிறுமி ஒருவர் உடல் நலக்குறைவால் சட்டார்பூர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி சிறுமி உயிரிழந்தார். இந்த நிலையில், ஆம்புலன்ஸ் கிடைக்காத நிலையில் உறவினர் சிறுமியின் உடலை தோளில் சுமந்தபடி பேருந்தில் தூக்கிச் சென்றார்.