அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு- மீண்டும் புதிய விசாரணை நடத்த உத்தரவு!

திங்கள், 31 அக்டோபர் 2022 (15:54 IST)
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை   மீண்டும்  புதிய   விசாரணை நடத்த வேண்டுமென உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி., கடந்த 2011 -2015 ஆம் ஆண்டுகளில், அப்போதைய அதிமும்க ஆசியில் போக்குவரத்துறை அமைச்சராக இருந்தபோது, போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கி தருவதாகப் பலரிடம் பணம் பெற்று  மோசடி செய்ததாக வழக்கு தொடரப்பட்டது

இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், செந்தில் பாலாஜி மற்றும் அவரது நண்பர்கள் மீது 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

 
ALSO READ: செந்தில் பாலாஜி மீதான வழக்கை ரத்து செய்யக்கூடாது: அமலாக்கத்துறை
 
இந்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் என சமீபத்தில்,  செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் செந்தில் பாலாஜி மீதான வழக்கை ரத்து செய்யக் கூடாது என அமலாக்கத் துறை தனது கடும் எதிர்ப்பை பதிவு செய்தது.

இதனையடுத்து இந்த வழக்கில், மோசடி செய்ததாக அமைச்சர் செந்தில் பாலாஜி மீது தொடரப்பட்ட வழக்கை மத்திய குற்றப்பிரிவு போலீஸார்  மீண்டும் புதிய விசாரணை நடத்த வேண்டுமென  உயர்  நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்