இவர்கள் இருவரும் ஒரே நிறுவனத்தை லாரி டிரைவராக வேலை செய்துவந்தனர். இந்நிலையில் பொருட்களை எடுக்கவந்த போது, பாலசுந்தரத்திற்கும், கோபாலகிருஷ்ணனுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இவர்கள் மோதலில் ஈடுப்பட்டதாகத் தெரிகிறது. இதனை அருகில் இருந்தவர்கள் தடுத்துள்ளனர்.
இதனையடுத்து, அன்று இரவு பாலுசுந்தரம் லாரிக்கு அருகில் தூங்கிவிட்டனர். பின்னர் அப்போது குடிபோதையில் இருந்த கோபாலகிருஷ்ணன் அருகில் இருந்த இரும்புக்கம்பியால் பாலசுந்தரத்தின் தலையில் அடித்தார்.ஆனாலும் ஆத்திரம் அடங்காத கோபாலகிருஷ்ணன் ஒரு கல்லை எடுத்து பாலசுந்தரத்தின் தலையில் போட்டார். இதில் பாலசுந்தரம் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.