நள்ளிரவில் கார் ஓட்டி வந்த சிறுவன் : மடக்கி பிடித்த போலீஸ்...

வியாழன், 6 டிசம்பர் 2018 (15:25 IST)
நம் தேசத்தில் கார் ஓட்டுவதற்கான உரிமம் 18 வயதிற்குமேல்  இருப்பவர்களுக்குதான் வழங்கப்படுகிறது. தற்போது சாலையில் அதிக விபத்துகள் ஏற்படுவதை தொடர்ந்து வாகனம் ஓட்டுநர் உரிமம் பெற விரும்பவர்களுக்கு பல்வேறு விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.
இந்நிலையில் நேற்று இரவில் பள்ளியில் படிக்கும் 14 வயதுடைய மாணவன் கார் ஓட்டி வந்திருக்கிறான். அப்போது சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த ஜெயக்குமார் தலைமையிலான போலீஸார்  சிறுவன் ஓட்டிவந்த காரை தடுத்து நிறுத்தி அந்த கார் ஓட்டுநர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
 
சிறுவனிடம் விசாரித்த போது, தன் பெயர் கிஷோர், அங்குள்ள தனியார் பள்ளியில் ஒன்பதாவது படித்து வருவதாகவும் கூறியுள்ளான்.
 
இந்நிலையில் சிறுவன் ஓட்டி வந்த கார் சிறுவனின் மாமா ஸ்ரீதருக்கு சொந்தமானது என்று விசாரணையில் தெரியவந்தது. உடனே போலீஸார் அவர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
 
வயதானவர்களே இரவில் வாகனம் இயக்குகிற வேளையில் அதிக விபத்து நேர வாய்ப்பிருக்கும் போது நள்ளிரவு வேளையில் பள்ளி  மாணவன் காரை ஓட்டி வந்த சம்பவம் சென்னையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்