நோட்டாவை விட குறைந்த வாக்குகளே பாஜக பெற்றுள்ளது; தமிழிசையை விமர்சித்த சி.ஆர். சரஸ்வதி

திங்கள், 25 டிசம்பர் 2017 (16:48 IST)
ஆர்கே நகர் இடைத்தேர்தலில் டிடிவி தினகரன் பணம் கொடுத்து தான் வெற்றி பெற்றுள்ளார் என பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதை டிடிவி தினகரனின் ஆதரவாளரான சி.ஆர்.சஸ்வதி விமர்சித்துள்ளார்.
ஆர்கே நகரில் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் 89,013 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுக சார்பில் போட்டியிட்ட மதுசூதனன் 48,306 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். திமுக சார்பில் போட்டியிட்ட மருதுகணேஷ் 24,651 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டார்.நாம் தமிழர் சார்பில் போட்டியிட்ட கலைக்கோட்டுதயம் 3,802 வாக்குகள் பெற்று நான்காம் இடம்பிடித்தார். பாஜக சார்பில் போட்டியிட்ட கரு.நாகராஜன் 1,368 வாக்குகள் பெற்று கடைசி இடம்பிடித்தார். நோட்டாவில் 2,348 வாக்குகள் பதிவாகியுள்ளது.

இந்த வெற்றியை தினகரன் பணம் கொடுத்து வாங்கியதாதவும், மக்களிடம் இருந்து சுருட்டிய பணத்தை மக்களுக்கு கொடுத்ததாகவும் பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கருத்து தெரிவித்திருந்தார். இது தொடர்பாக டிடிவி ஆதரவாளர் சி.ஆர்.சரஸ்வதி கூறுகையில், நோட்டாவைவிட பாஜக குறைந்த வாக்குகள்தான் பெற்றது. அதனால் டிடிவி நோட்டாவுக்கு பணம் கொடுத்துள்ளார் என்று ஏற்றுக்கொள்ள முடியுமா? நாங்கள் பணம் கொடுக்க தேவை இல்லை. அதற்கான அவசியமும் இல்லை. மக்கள் நினைத்ததால் தான் டிடிவி தினகரன் வெற்றியடைந்துள்ளார் என்று கூறியுள்ளார்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்